தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பிடெக் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் ஆகஸ்ட் 24ம் தேதியன்று தொடங்கின. முதலில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி செப்டம்பர் 28ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 9 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
என்ஆர்ஐ மாணவர்கள் அக்டோபர் 23 ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.