கல்வி

ஐஏஎஸ் , ஐபிஎஸ் ஆக விருப்பமா ?

ஐஏஎஸ் , ஐபிஎஸ் ஆக விருப்பமா ?

webteam

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வான, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற 24 வகையான பணிகளுக்கான போட்டித் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 896 காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக இந்தியா முழுவதும் இத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 19.02.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.03.2019, மாலை 06.00 மணி
ஆப்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 17.03.2019, இரவு 11.59 மணி
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 18.03.2019, மாலை 06.00 மணி
(Prelims)முதல் நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 02.06.2019

பணிகள்:
1. ஐஏஎஸ் - Indian Administrative Service
2. ஐஎப்எஸ் - Indian Foreign Service
3. ஐபிஎஸ் - Indian Police Service
4. Indian P & T Accounts & Finance Service, Group ‘A’
5. Indian Audit and Accounts Service, Group ‘A’.
6. Indian Revenue Service (Customs and Central Excise), Group ‘A’.
7. Indian Defence Accounts Service, Group ‘A’.
8. ஐஆர்எஸ் - Indian Revenue Service (I.T.), Group ‘A’.
9. Indian Ordnance Factories Service, Group ‘A’ (Assistant Works Manager, Administration)
10. Indian Postal Service, Group ‘A’.
11. Indian Civil Accounts Service, Group ‘A’.
12. Indian Railway Traffic Service, Group ‘A’.
13. Indian Railway Accounts Service, Group 'A'
14. Indian Railway Personnel Service, Group ‘A’.
15. Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’
16. Indian Defence Estates Service, Group ‘A’ 
17. Indian Information Service (Junior Grade), Group ‘A’.
18. Indian Trade Service, Group 'A'.
19. Indian Corporate Law Service, Group ‘A’
20. Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade).
21. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli
Civil Service, Group 'B'.
22. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli
Police Service, Group 'B'.
23. Pondicherry Civil Service, Group 'B'.
24. Pondicherry Police Service, Group ‘B’.

காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 896 காலிப்பணியிடங்கள்

வயது வரம்பு: (01.08.2019 அன்றுக்குள்)
21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
02.08.1987 - க்கு பிறகும், 01.08.1998 க்குள்ளும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:
ஆண்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கான கட்டணம் - ரூ.100
பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, PwBD போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
கடைசி வருடம் பயின்று கொண்டிருப்பவர்களும் இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள்.
கடைசி வருடம் முடித்த மற்றும் பயிற்சி பெறும் மருத்துவ  (MBBS) மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
முதலில் யுபிஎஸ்சி - யின் http://www.upsconline.nic.in - என்ற இணையதளத்திற்கு சென்று, தகுந்த புகைப்படம் மற்றும் கையெழுத்து போன்ற கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் கொடுத்து விண்ணப்பிக்கலாம். 

முக்கிய குறிப்புகள்:
1. ஆறு முறை மட்டுமே இந்த தேர்வை எழுத வாய்ப்புகள் தரப்படும்.
2. ஏற்கனவே யுபிஎஸ்சி மூலம் ஐஏஎஸ் பயிற்சிக்கு தேர்வானவர்கள், மீண்டும் இந்த தேர்வை எழுத அனுமதிக்க மாட்டாது.
3. தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், எந்த காரணத்தைக் கொண்டும் விண்ணப்பத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.
4. குறிப்பிட்ட உடற்தகுதி மிக அவசியம்.
5. பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான 10% இடஒதுக்கீடு இந்த தேர்வில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
1. சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு தேர்வு - முதல் நிலைத் தேர்வானது, அப்ஜெக்டிவ் வினாக்கள் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதனடிப்படையில் முதன்மைத்தேர்விற்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
2. சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு - எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வர்கள் குறிப்பிட்ட பணிகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மேலும், இது குறித்த முழு விவரங்களை பெற,
https://upsc.gov.in/sites/default/files/Final_Notice_CSPE_2019_N.pdf - என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.