கல்வி

தமிழ்நாடு படிப்பறிவுடன் திகழ என்ன காரணம்? - யுனிசெஃப் பாராட்டு

தமிழ்நாடு படிப்பறிவுடன் திகழ என்ன காரணம்? - யுனிசெஃப் பாராட்டு

Veeramani

கொரோனா காலத்துக்குப் பிறகு பள்ளிகளுக்கு குழந்தைகளை மீண்டும் அழைத்து வர உலக நாடுகள் திணறிய நிலையில், தமிழ்நாட்டில் முதலமைச்சரின் திட்டங்கள் இந்த நிலையை மாற்றியதாக, ஐ.நா.வின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பு பாராட்டியுள்ளது.

குழந்தைகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணவும் தமிழக அரசும் யூனிசெஃப் இந்தியாவும் இணைந்து ஒருங்கிணைந்த சமூக கொள்கை திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இதுகுறித்து யூனிசெஃப் இந்தியாவின் தலைவர் ஹுயூம் ஹி பன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டிய அவர், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் திட்டங்களை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதாகக் கூறினார். மதிய உணவு திட்டத்தில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதாகவும், இந்த திட்டங்களால்தான் தமிழ்நாடு படிப்பறிவு உள்ள மாநிலமாக திகழ்வதாகவும் ஹுயூம் ஹி பன் குறிப்பிட்டார்.