கல்வி

இன்று வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்

இன்று வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்

webteam

பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான, 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட பொதுத்தேர்வானது மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-இல் முடிவடைந்தது. இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 09.30 மணி முதல் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவை மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையங்கள், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் பள்ளிகளில் வழங்கிய கைபேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும், தேர்வு முடிவுகள் SMS மூலம் அனுப்பப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

உயர்கல்வி சேர்க்கைக்கு +1 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என அறிவித்த பின்பு நடத்தப்பட்ட +1 பொதுத் தேர்விற்கு மாணவர்களும் பள்ளிகளும் எத்தகைய முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர் என்பது முடிவுகள் வெளியான பிறகு தெரிய வரும்.