கல்வி

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு காவலர் பணி!

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு காவலர் பணி!

webteam

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும், இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை - பெண் மற்றும் திருநங்கை), இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை - ஆண்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்) போன்ற பதவிகளுக்கான தேர்வு - 2019 பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணிகள்:
இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை - பெண் மற்றும் திருநங்கை) 
இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை - ஆண்)
இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) 
தீயணைப்பாளர் (ஆண்) 

காலிப்பணியிடங்கள்:
இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட & மாநகர ஆயுதப்படை - பெண் மற்றும் திருநங்கை) - 2,465 
இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை - ஆண்) - 5,962
இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) - 208
தீயணைப்பாளர் (ஆண்) - 191

மொத்தம் = 8,826 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 06.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 08.03.2019, காலை 10.00 மணி 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.04.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஊதியம்:
ரூ.18,000 முதல் ரூ.52,900 வரை மாதம் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.130 

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
பொது பிரிவினர் - குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருத்தல் வேண்டும்.
பி.சி / எம்.பி.சி பிரிவினர் - குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை இருத்தல் வேண்டும்.
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 29 வயது வரை இருத்தல் வேண்டும்.
ஆதரவற்ற விதவை - குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர் / முன்னாள் மத்திய துணை ராணுவப்படையினர், ஓய்வு பெறவுள்ளோர் - அதிகபட்சமாக 45 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 
10ஆம் வகுப்பில், தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்து, தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

குறிப்பு: 
1. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.
2. 10ஆம் வகுப்பில், தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்காமல் தேர்ச்சி பெற்றவர்கள்,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலைத் தேர்வை, பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டிற்குள் தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்வு முறைகள்:
1. எழுத்துத் தேர்வு
2. உடற்கூறு அளத்தல்
3. உடற்தகுதித் தேர்வு
4. உடற்திறன் போட்டிகள்
5. சிறப்பு மதிப்பெண்கள்

எழுத்துத் தேர்வு முறை:
எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண்கள்: 80 மதிப்பெண்கள்
எழுத்துத் தேர்வு நடைபெறும் நேரம்: 1 மணி 20 நிமிடங்கள்

குறிப்பு: 
எழுத்துத் தேர்வில் தகுதி பெற தேர்வர்கள் குறைந்தபட்சமாக 28 மதிப்பெண்களை எடுக்க வேண்டும்.

உடற்கூறு அளத்தல்: (உயரம் மற்றும் மார்பளவு)
1. பொது, பி.சி, எம்.பி.சி பிரிவினர் - குறைந்தபட்சம் ஆண்கள் - 170 செ.மீ உயரமும், 81 செ.மீ மார்பளவும், பெண்கள் - 159 செ.மீ உயரம் மட்டும் பெற்றிருத்தல் வேண்டும்.
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - குறைந்தபட்சம் ஆண்கள் - 167 செ.மீ உயரமும், 81 செ.மீ மார்பளவும், பெண்கள் - 157 செ.மீ உயரம் மட்டும் பெற்றிருத்தல் வேண்டும்.
3. முன்னாள் ராணுவத்தினர் / முன்னாள் மத்திய துணை ராணுவப்படையினர், ஓய்வு பெறவுள்ளோர் - உடற்கூறு அளத்தல் தேர்வு கிடையாது.

உடற்தகுதித் தேர்வு:
1. ஆண்கள்: 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
2. பெண்கள் மற்றும் திருநங்கைகள்: 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்.
3. முன்னாள் ராணுவத்தினர் / முன்னாள் மத்திய துணை ராணுவப்படையினர், ஓய்வு பெறவுள்ளோர்: 1500 மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

உடற்திறன் போட்டிகள்:
1. ஆண்கள்: கயிறு ஏறுதல், நீளம் (அ) உயரம் தாண்டுதல், 100 மீட்டர் (அ) 400 மீட்டர் ஓட்டம்
2. பெண்கள்: நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் (அ) குண்டு எறிதல் (4 கிலோ), 100 மீட்டர் (அ) 200 மீட்டர் ஓட்டம் 
3. முன்னாள் ராணுவத்தினர் / முன்னாள் மத்திய துணை ராணுவப்படையினர், ஓய்வு பெறவுள்ளோர்: குண்டு எறிதல் (7.26 கிலோ), நீளம் (அ) உயரம் தாண்டுதல், 100 மீட்டர் (அ) 400 மீட்டர் ஓட்டம்

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தின், www.tnusrbonline.org - என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
www.tnusrbonline.org- என்ற இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம்.