கல்வி

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை!

webteam

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், உதவிப் பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 242 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு, தகுதியுள்ள அனைவரிடமிருந்தும் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. உதவிப் பொறியாளர்
2. சுற்றுச்சூழல் விஞ்ஞானி
3. இளநிலை உதவியாளர்
4. தட்டச்சர்

காலிப்பணியிடங்கள்:
1. உதவிப் பொறியாளர் - 78
2. சுற்றுச்சூழல் விஞ்ஞானி - 70
3. இளநிலை உதவியாளர் - 38
4. தட்டச்சர் - 56

மொத்தம் = 242 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 05.03.2020
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.03.2020
கணினி வழித்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு: (12.02.2020 அன்று)
பொது பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகப்பட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும்.
எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகப்பட்சமாக 35 வயது வரை இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:
பொது / பி.சி / எம்.பி.சி பிரிவினர் - ரூ. 500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் - ரூ.250

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.19,500 முதல் அதிகப்பட்சமாக ரூ.1,19,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:


1. உதவிப் பொறியாளர் என்ற பணிக்கு, அடிப்படை கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு (பி.இ - சிவில் இன்ஜினியரிங் / கெமிக்கல் இன்ஜினியரிங்) மற்றும் முதுகலை பட்டப்படிப்பு (எம்.இ - சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் / கெமிக்கல் இன்ஜினியரிங், எம்.டெக் - சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் / பெட்ரோலியம் ரிஃபைணிங் & பெட்ரோகெமிக்கல் / சுற்றுச்சூழல் மேலாண்மை ) போன்ற ஏதேனும் ஒரு துறைகளில் பயின்று அண்ணாப்பல்கலைக் கழகத்தால் பட்டம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

2. சுற்றுச்சூழல் விஞ்ஞானி என்ற பணிக்கு, அறிவியல் முதுகலை பட்டப்படிப்புகளில் (வேதியியல், உயிரியல்,சுற்றுச்சூழல்) போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி அவசியம்.

3. இளநிலை உதவியாளர் என்ற பணிக்கு, இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் கணினி படிப்பில் குறைந்தபட்சம் 6 மாத பட்டயம் / சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

4. தட்டச்சர் என்ற பணிக்கு, இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி, அரசு தட்டச்சு தொழில்நுட்ப தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலையில் தேர்ச்சி அத்துடன் கணினி படிப்பில் குறைந்தபட்சம் 6 மாத பட்டயம் / சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் www.tnpcb.gov.in அல்லது https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB/indexInstruction.jsp- என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த பல்வேறு தகவல்களை பெற https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.