கல்வி

அரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி: 2,340 காலியிடங்கள் அறிவிப்பு

அரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி: 2,340 காலியிடங்கள் அறிவிப்பு

webteam

தமிழக அரசின் கீழ் செயல்படும் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வாணையம். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
உதவிப் பேராசிரியர்

மொத்த காலியிடங்கள் = 2,340

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 28.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 04.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2019, மாலை 05.00 மணி வரை

வயது வரம்பு:
01.07.2019 அன்றுக்குள், 57 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.57,700 முதல் அதிகபட்சமாக ரூ.1,82,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.300
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரிவினர் - ரூ.600

குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, NET / SLET / SET / SLST / CSIR / JRF போன்ற ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது அதிகபட்ச கல்வித்தகுதியாக, முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் அத்துடன் பிஎச்.டி (Ph.D) பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://trb.tn.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.