கல்வி

வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

webteam

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 2020 -21 கல்வி ஆண்டில் இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 14 உறுப்புக்கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் பத்து வகையான இளநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. அதற்கான மாணவர் சேர்க்கைக்கு 48,820 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் இணையதளம் மூலம் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் அக்டோபர் 23 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. அதில் 31,410 மாணவர்கள் பொதுப்பிரிவுக்குத் தகுதிபெற்று தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மொத்த மாணவர்களில் 86.29 சதவீதம் பேர் வேளாண்மைப் பட்டப்படிப்பை தங்களுடைய முதல் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்துள்ளனர்.

சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான தரவரிசைப்பட்டியல் அக்டோபர் 28 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.