கல்வி

பொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?

பொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?

webteam

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில், மேனேஜர், சீனியர் அதிகாரி போன்ற பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. மேனேஜர் (டெக்னிக்கல்)
2. மேனேஜர் (ஃபைனான்ஸ்)
3. சீனியர் அதிகாரி (டெக்னிக்கல்)
4. சீனியர் அதிகாரி (ஃபைனான்ஸ்)

காலியிடங்கள்: 
1. மேனேஜர் (டெக்னிக்கல்) - 05
2. மேனேஜர் (ஃபைனான்ஸ்) - 04
3. சீனியர் அதிகாரி (டெக்னிக்கல்) - 10
4. சீனியர் அதிகாரி (ஃபைனான்ஸ்) - 20

மொத்தம் = 39 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 17.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 17.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.12.2019
ஆன்லைனில் தேர்வு நடைபெறும் தேதி: 26.12.2019

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக, 21 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:
1. மேனேஜர் பணிக்கு குறைந்தபட்சமாக, ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
2. சீனியர் அதிகாரி பணிக்கு குறைந்தபட்சமாக, ரூ.56,900 முதல் அதிகபட்சமாக ரூ.1,80,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:
1. பொது, பி.சி, எம்.பி.சி பிரிவினர் - ரூ. 800 + GST @ 18%
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ. 400 + GST @ 18%

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, பி.இ / பி.டெக் / எம்.பி.ஏ / சி.ஏ / AMIE / ICWA போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
பணிக்கு தகுந்தாற்போல் குறிப்பிட்ட பணி அனுபவம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.tiic.org - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
1. ஆன்லைன் வழித்தேர்வு
2. நேர்முகத் தேர்வு

குறிப்பு:
1. ஆன்லைன் வழித்தேர்வானது ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும்.
2. தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது.

இது குறித்த முழு தகவல்களை பெற, http://www.tiic.org/Recruitment_Notification_2019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.