கல்வி

துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் கவுன்சிலிங்

துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் கவுன்சிலிங்

JustinDurai
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, 19 துணை நிலை மருத்துவ பட்டப் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர தகுதியான 58,475 பேருக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் போன்ற சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆன்லைன் (www.tnhealth.tn.gov.in) முறையில் இன்று நடக்கிறது. நாளை முதல் பொதுப்பிரிவினர் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையிலான கவுன்சிலிங், 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.