கல்வி

இமயமலையில் இத்தனை எவரெஸ்ட் சிகரங்களா?.. தெரிந்த அதிசயமும்.. தெரியாத ரகசியமும்!

இமயமலையில் இத்தனை எவரெஸ்ட் சிகரங்களா?.. தெரிந்த அதிசயமும்.. தெரியாத ரகசியமும்!

webteam

இமயமலையின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்று நமக்கு தெரிந்தாலும், இதைப் பற்றி தெரியாத பல ஸ்வாரசியமான பல விஷயங்கள் உள்ளன.

இமயமலையில் மஹாலங்கூர் மலைத்தொடரின் தான் எவரெஸ்ட் சிகரம் அமைந்திருக்கிறது. இதை நேபாளியர் சாகர்மா என்றும், சீனாவில் சோமோலுங்குமா என்றும் சொல்லுகிறார்கள். எவரெஸ்ட் உலகிலேயே மிக உயர்ந்த சிகரமாகும். இதற்கு எவரெஸ்ட் என்று பெயர் வந்ததற்கு சர் ஆண்ரியூக் வாக் அவர்கள் தான் காரணம். சர் ஜாஸ் எவரெஸ்ட் என்பவர், கிட்டத்தட்ட 1865ல் இமயமலையின் உச்சியை அடைய நினைத்து முயன்றார். ஆனால் அவரால் இயலவில்லை, ஆகையால் அவரை பெருமைபடுத்தும் விதமாக சர் ஆண்ரியூக் வாக் அவர்கள் இமயமலையின் சிகரத்திற்கு எவரெஸ்ட் என்று பெயரிட்டார். ஆச்சர்யமா இருக்குல்ல...

இது, இந்தியாவையும் தாண்டி, நேபால், பூடான், பாகிஸ்தான் என்று 5 நாடுகளில் தன்னை வியாபித்துக்கொண்டுள்ளது. இதன் எல்லை எதுவரை என்று பார்த்தால், வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்து குஷ் மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளி வரை பரவியுள்ளது.

இதில் நிறைய நதிகள் உற்பத்தியானாலும், இந்து, கங்கை பிரம்மபுத்ரா, சட்லஜ், யமுனா... இதெல்லாம் முக்கிய நதியாக கூறப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் நதியால் பல கோடி மக்கள் தனது அன்றாட வாழ்கையில் பயனடைகிறார்கள். இந்த மலை எதிரிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் அரணாகவும் இருக்கிறது. சரி.... இந்த மலை எப்படி உருவானது தெரியுமா? இந்த மலை உருவான விதம் பற்றி அறிவியல் ஆய்வாளார்கள் நமக்கு சில தகவல்களை தந்துள்ளார்கள். அது என்னனு பார்கலாம்.

இமயமலை உருவான விதம்

சுமார் 60,000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தனித்தீவாக ஆஸ்திரேலியாவின் பக்கத்தில் இருந்ததாம், நம் நிலப்பரப்பின் கீழ் உள்ள டெட்டானிக் தகடு கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு நோக்கி 16 cm அளவிற்கு நகர்ந்து நகர்ந்து, மேலே உள்ள யூரோ டெட்டானிக் தகடுடன் மோதி இமயமலை உருவானதாக ஆய்வாளார்கள் கூறுகிறார்கள். அதாவது ஆஸ்திரேலியா பக்கத்தில் இருந்த நாம, மொத்த குடும்பமாய் நகர்ந்து வந்துட்டோம். நிலப்பரப்பில் ஒரு கடல் பயணம். இது எப்படி இருக்கு?

இமயமலையில் ஒரேஒரு எவரெஸ்ட் சிகரம் தானா இருக்கு? அதுதான் இல்லை. கடல் மட்டதிலிருந்து சுமார், 8848 உயரம் கொண்டது ஒரு எவரெஸ்ட் சிகரம். அதைத்தவிர 7000 மீட்டர் உயரம் கொண்ட மலைகள் மட்டும் சுமார் 50 மேல் இருக்கிறது என்றும், 8000 மீட்டர் உயரம் கொண்ட மலைகள் மட்டும் 14 க்கும் மேல் உள்ளது என்றும், இதை தவிர பலநூறு, சிறிய மலைகள் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆர்டிக், அண்டார்டிகா போன்று அடர்ந்த பனிகள் இங்கு நிறைந்து உள்ளன.

அப்படியென்றால் பனிசறுக்கு விளையாட போலாமா? என்று தானே நினைக்கிறீர்கள் ? அது முடியாது. ஏனென்றால் இதன் உச்சியை அடைவது அவ்வளவு சுலபமில்லை. ஒவ்வொரு வருடமும், இதன் உச்சியை அடைய நூற்றுக்கணக்கான சாகச வீரர்கள் முயன்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் இருவரை தவிர யாராலும் அதன் உச்சியை அடைய முடியவில்லை. ஆனால் அங்கும் சில மக்கள்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சரி, அதில் மலைகள் இருக்கிறது நதிகள் இருக்கிறது என்று பார்த்துவிட்டோம். இதை தவிர கணவாய்கள் வேறு உள்ளது, அதையும் பார்த்து விடலாம்.

பானிகால் கணவாய்:

இது பிர் பாஞ்சல் மலைத்தொடரில் இருக்கிறது. இதன் உயரம் 2,832 மீட்டர் (9,291 அடி உயரம்) . இம்மலைத்தொடர் காஷ்மீர் மாநிலத்திற்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே அமைந்துள்ளது. காஷ்மீரி மொழியில் பானிகால் என்பதற்கு பனிப்புயல் என்று பொருளாகும்.

குளிர்காலங்களில் இம்மலைத்தொடரானது பனிமூடி இருக்கும். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு பானிகால் கணவாய் வழியாக ஒரு சாலை 1958 வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் ஜவகர் குகை வடிவமைக்கப்பட்டதும் இப்பாதை உபயோகத்தில் இல்லை.

சோஜி லா :

இது லடாக் பகுதியில் அமைந்துள்ள ஓர் கணவாய் . காஷ்மீரின் சிறிநகரையும் லடாக்கின் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை இக்கணவாய் வழியாகச் செல்கிறது. இக்கணவாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோஜி லா சுரங்கச்சாலை 9 கிலோமீட்டர் நீளம் கொண்டது.

பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் இந்தச் சாலையானது அடிக்கடி மூடப்படும். 1947 இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்தக் கணவாயானது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டது. பின்னர் நவம்பர் 1 ம் தேதி மீண்டும் இந்தியப்படைகளின் வசம் வந்தது.

ரோதங் கணவாய்:

இமயமலைத் தொடரின் பிர் பாஞ்சல் பகுதியில் இருக்கும் மணாலியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இது குலு பள்ளத்தாக்கையும் லாஹௌல், ஸ்பிடி பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. இது இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கணவாய் புத்தமதத்தினர் வாழும் வடக்குப் பகுதியையும் இந்து மதத்தினர் வாழும் தெற்குப் பகுதியையும் இயற்கையாகப் பிரிக்கிறது. இப்பகுதியில் இரண்டு நதிகள் ஓடுகின்றன. பியாஸ் நதி தெற்குப் பக்கமும், செனாப் நதி வடக்குப் பக்கம் மேற்கு நோக்கி ஓடுகிறது.

மோகன் கணவாய் :

இது சிவாலிக் மலைத்தொடரில் உள்ள முக்கியமான கணவாய் ஆகும். இது இமயமலைத் தொடரில் சிக்கிம் மாநிலத்தை நோக்கிச் செல்கிறது. உத்திரப்பிரதேசத்தின் சகாரன்பூரிலிருந்து உத்தரகாண்டின் மலைவாசலான முசோரி வரை செல்கிறது.

அர்னிகோ ராஜ்மார்க் கண‌வாய்:

இது காத்மண்டுவையும் காத்மண்டு பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. இது நேபாளத்தின் அபாயகரமான சரிவுகள் கொண்ட, சீன-நேபாள‌ நட்புப்பாலம். இது 1585 மீட்டர் உயரம் கொண்டது. இது இந்திராவதி மற்றும் சன்கோசி ஆகிய நதிகள் உற்பத்தியாகிறது. இந்தக் கணவாய் சீனாவுடன் இணைந்திருந்தாலும் இதன் மூலம் முக்கியப் போக்குவரத்து எதுவும் நடப்பதில்லை.

கேங்டாக் கணவாய்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. இது இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கோடைக்குடியிருப்பு. இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1975-ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேரும் வரையில் சிக்கிம் தனிநாடாகவே இருந்தது. அப்போது கேங்டாக் அதன் தலைநகராக இருந்தது.
திபெத்திய பௌத்த மதத்திற்கான முக்கியமான மையமாகவும் இது விளங்குகிறது.

தோரோங் லா கணவாய்:

இது, 5,416 மீட்டர்கள் (17,769 அடிகள் ) உயரத்தில் நேபாள நாட்டில் அமைந்துள்ள ஒரு கணவாய். உள்ளூர் வணிகர்கள் அடிக்கடி இந்த கணவாய்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் கணவாய் மனாங் மற்றும் ராணிபெளவா சிற்றூர்களை இணைக்கிறது.

இத்தனை அதிசயங்களை மட்டும் அல்லாமல், என்ணற்ற குகைகள், அபூர்வ மூலிகைகள், மற்றும், அதிசயதக்க விலங்கினங்கள் பறவைகள் , மனித காலடி படாத இடங்கள், மர்மங்கள் பலவும் கொண்டதாக இருக்கிறது.