கல்வி

மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..!

மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..!

webteam

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO), இளநிலை உதவியாளர் (கணக்கு), கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பாணைகள் வெளியாகி உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. இளநிலை உதவியாளர் (கணக்கு)
2. கணக்கீட்டாளர்
3. உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)
4. உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்)
5. உதவி பொறியாளர் (சிவில்)

காலிப்பணியிடங்கள்:
1. கணக்கீட்டாளர் - 1,300
2. இளநிலை உதவியாளர் (கணக்கு) - 500
3. உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) - 400
4. உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) - 125
5. உதவி பொறியாளர் (சிவில்) - 75

மொத்தம் = 2,400 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 08.01.2020

1) கணக்கீட்டாளர்:
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 10.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2020
தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 13.02.2020
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்.

2) இளநிலை உதவியாளர் (கணக்கு):
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 10.02.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.03.2020
தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.03.2020
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்.

3) உதவி பொறியாளர்:
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 24.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2020
தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.02.2020
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்.

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
1) எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் - 18 வயது முதல் 35 வயது வரை
2) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 18 வயது முதல் 32 வயது வரை
3) பொது பிரிவினர் - 18 வயது முதல் 30 வயது வரை

குறிப்பு:
இளநிலை உதவியாளர் (கணக்கு) என்ற பணிக்கு மட்டும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்றோருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

தேர்வுக்கட்டணம்:
1) எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் - ரூ.500
2) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொது பிரிவினர் - ரூ.1,000

கல்வித்தகுதி:
1. கணக்கீட்டாளர் - ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். அளவீட்டு கருவி மூலம் கணக்கீடு செய்வதற்கும், சைக்கிள் ஓட்டத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

2. இளநிலை உதவியாளர் (கணக்கு) - இளங்கலை வணிகவியல் - பி.காம் (B.Com) என்ற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

3. உதவி பொறியாளர் - பி.இ (B.E - EEE / ECE / EIE / CSE / IT / Mechanical / Civil ) அல்லது அதற்கிணையான AMIE (எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / சிவில்) - போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதித் தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, https://www.tangedco.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.