கல்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்: ஞானத்தமிழ் குறுகிய கால படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்: ஞானத்தமிழ் குறுகிய கால படிப்பு அறிமுகம்

webteam

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுக் குழுவின் சார்பில் ஞானத்தமிழ் என்ற குறுகியகால படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு மூன்று மாதம் மற்றும் ஆறு மாத காலம் கற்பிக்கப்படும்.

கோ. பார்த்தசாரதி 

ஞானத்தமிழ் குறுகிய கால படிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் சேர்ந்து படிக்கலாம். இதற்கு வயதுவரம்போ, கல்வித்தகுதியோ தேவையில்லை. தமிழில் வளமையை உணரும் வகையில் தமிழ் பக்தி இலக்கியங்களில் சிறப்பியல்புகள், அதன் வளங்கள், இலக்கியத்திலிருந்து தமிழ் வளர்ந்துவந்துள்ள வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தப் படிப்பு அமைகிறது.

முனைவர் பாலாஜி வெங்கட்ராமன் 

ஆர்வமுள்ள அனைவரும் சேர்ந்து படிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் தொடங்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறார்கள். 

கே. ஸ்ரீராம்

இந்த குறுகிய கால படிப்புக்கான அறிமுக நிகழ்வு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கோ. பார்த்தசாரதி தலைமையில் இணையவழியில் நடைபெறவுள்ளது. கனடா காமன்வெல்த் கல்விக் கழகத்தின் துணைத் தலைவர் முனைவர் பாலாஜி வெங்கட்ராமன் தொடக்கவுரை ஆற்றுகிறார்.

மேலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஞானத்தமிழ் ஆய்வு இருக்கை பொறுப்பாளர் ஸ்ரீராம், முனைவர் வையாபுரி, முனைவர் அரங்கநாதன், திறந்தநிலைப் பல்கலைக்கழக தமிழியல் - பண்பாட்டு மைய இயக்குநர் பேராசிரியர் சு. பாலசுப்பிரமணியன் ஆகியோரும் அறிமுக நிகழ்வில் பேசுகிறார்கள்.