கல்வி

தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம்: முதுநிலைப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம்: முதுநிலைப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடக்கம்

webteam

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் பிஎச்டி, எம்எஸ்டி மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், அக்டோபர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்ப் பரவியல், தொற்று நோயியல், பொது சுகாதாரம், உயிரி தரவியல் ஆகிய பிரிவுகளில் பகுதிநேர மற்றும் முழுநேர முனைவர் படிப்புகள் பல்கலைக்கழகத்தில் உள்ளன. மொத்தம் ஆறு இடங்கள்.

கல்வித்தகுதி

பிஎச்டி ஆய்வுப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை அறிவியல் பொதுசுகாதாரப் படிப்புக்கு 16 இடங்களும், நோய்ப் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ், பிவிஎஸ்சி, முதுநிலை லைஃப் சயின்ஸ், பிபிடி, பிஓடி, பி.பார்ம், பிஇ, உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்தவர்கள் எம்எஸ்சி பொது சுகாதாரப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

நோய்ப் பரவியல் படிப்புக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ், பிவிஎஸ்சி, முதுநிலை லைஃப் சயின்ஸ், எம்பிடி, எம்ஓடி, பி.பார்ம், எம்எஸ்சி லைஃப் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். முதுநிலை பொது சுகாதார இதழியல் தொடர்பான ஓர் ஆண்டு படிப்பில் சேர விரும்புவோர் ஓர் இளநிலைப் படிப்புடன் இதழியல் துறையில் ஆறு மாத கால பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

விவரங்களுக்கு: www.tnmgrmu.ac.in