கல்வி

மற்ற பாடங்களை விட தமிழில் குறைவான தேர்ச்சி..!

Rasus

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில்தான் குறைந்த அளவிலான பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38  ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3 சதவிகித பேரும் மாணவிகள் 97 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 98.53 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தப்படியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 98.48 சதவீதம் பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 98.45 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியான தேர்ச்சி விகிதம் வருமாறு:-

தமிழ்- 96.12 %
ஆங்கிலம்- 97.35 %
கணிதம்- 96.46%
அறிவியல்- 98.56%
சமூக அறிவியல்- 97.07%