கல்வி

“6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை” - மக்கள் நல்வாழ்வுத்துறை

“6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை” - மக்கள் நல்வாழ்வுத்துறை

நிவேதா ஜெகராஜா

முதல்வருடனான கலந்தாலோசனையில், “6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை” என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும், வெள்ளி, சனி, ஞாயிறன்று வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்கக் கோருவது பற்றியும் முடிவெடுக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டது. இதற்கு நிபுணர் ஆலோசனை பெறப்படும் என சொல்லப்பட்டிருந்தது.

அந்த நிபுணர் ஆலோசனையின்போது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இத்துறை தற்போது தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும், அக்டோபர் இறுதிக்குள் 75% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி பயணம் செய்வதாகவும் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.