கல்வி

45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

Sinekadhara

விடுதியைவிட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதாக ராஜா முத்தையா கல்லூரி நிர்வாகம் மீது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி 45ஆவது நாட்களாக கடலூர் மாவட்டம் ராஜா முத்தையா கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 45வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களை கல்லூரியைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

ஆனால் மாணவர்கள் வெளியேறாததால் நேற்று அவர்களுக்கு விடுதியில் உணவு மறுக்கப்பட்டது. எனவே தங்களுக்குக்கான உணவை அவர்களே தயார் செய்துகொண்டனர்.

இந்நிலையில் விடுதியைவிட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கல்லூரி நிர்வாகம் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மாணவர்கள் புகார் கொடுத்துள்ளனர்