கல்வி

'இந்தியாவின் எழுச்சிக்காக மாணவர்கள் பணியாற்ற வேண்டும்' - ஆளுநர் ரவி

'இந்தியாவின் எழுச்சிக்காக மாணவர்கள் பணியாற்ற வேண்டும்' - ஆளுநர் ரவி

Veeramani

நாட்டின் நலனில் அக்கறை கொண்டு, இந்தியாவின் எழுச்சிக்காக மாணவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார்.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நாட்டின் நலனில் அக்கறை கொண்டு இந்தியாவின் எழுச்சிக்காக மாணவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், வாழ்க்கையில் நம்பிக்கை, தைரியம் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.



கலந்துரையாடலின் போது மாற்றுத்திறன் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, இதன்பின்னர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் உறுப்பு கல்லுாரிகளின் முதல்வர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நேற்று ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.