கல்வி

பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம்: கடந்தாண்டை விட 13 ஆயிரம் கூடுதல் விண்ணப்பங்கள்

பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம்: கடந்தாண்டை விட 13 ஆயிரம் கூடுதல் விண்ணப்பங்கள்

PT WEB

கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதன்படி, இந்த ஆண்டு ஒரு 1,74,171 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். கடந்த ஆண்டு 1,60,834 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13,000க்கும் அதிகமானோர் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது. வரும் 28 ஆம்தேதி சான்றிதழ் சரிபார்ப்புப்பணிகளும், வரும் செப்டம்பர் 4 ஆம்தேதி தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்புப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7 முதல் 11 ஆம்தேதி வரை நடைபெறும் என்றும், ஆன்லைன் பொது கலந்தாய்வு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 14 வரை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.