கல்வி

'7.5% ஒதுக்கீட்டு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது' - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

'7.5% ஒதுக்கீட்டு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது' - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

Veeramani

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.

இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரத்தை அனைத்து பொறியியல் கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்பதாக அறிவித்த நிலையில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.