கல்வி

அண்டார்டிகாவில் கால் பதித்த எஸ்ஆர்எம் முன்னாள் மாணவி மானஷா - பாரிவேந்தர் பாராட்டு

அண்டார்டிகாவில் கால் பதித்த எஸ்ஆர்எம் முன்னாள் மாணவி மானஷா - பாரிவேந்தர் பாராட்டு

Veeramani

சர்வதேச அளவில் வீர தீர செயல்களில் ஈடுபட்டு சாதனை செய்பவர்களின் பட்டியலில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவி மானஷா இடம் பிடித்துள்ளார். இவர் அண்டார்டிகா துருவ பனிப் பிரதேசத்திற்கு சென்று கால் பதித்து  எஸ்ஆர்எம் கொடியை அங்கு நாட்டி சாதனை படைத்துள்ளார். இதற்காக எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் சாதனை படைத்த மானஷாவிற்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.  

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்(SRMIST SRM Insitute of Science and Technology) பி.டெக் கெமிக்கல் பொறியியல் படித்தவர் மானஷா. இவர் தற்போது சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு வாழ்க்கையில் எதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகவே அதனை செயலாக்கும் விதமாக அண்டார்டிகா துருவ பனி பிரதேசத்திற்கு செல்ல முடிவு செய்து அதற்காக விண்ணப்பித்தார்.



2022 ம் ஆண்டிக்கான அண்டார்டிகா செல்லும் குழுவிற்கு  இவரை போல பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு தகுதி சுற்று தேர்வில் தேர்வு செய்யப்பட்ட கொரியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஜிம்பப்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 இளம் வீரர்களில் எஸ்ஆர்எம் முன்னாள் மாணவி மானஷாவும் அண்டார்டிகா துருவ பனி பிரதேசத்திற்கு செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டார்.

இவர் அண்டார்டிகா துருவ பனி பிரதேசத்திற்கு செல்வதற்கான செலவினங்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஏற்றுக்கொண்டது. அதை தொடர்ந்து எஸ்ஆர்எம் முன்னாள் மாணவி மானஷா கடும் பயண முயற்சிக்கு பின் அண்டார்டிகா துருவ பனி பிரதேசத்திற்கு சென்று கால்பதித்து அங்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் கொடியினை நாட்டி சாதனை படைத்தார்.



மானஷாவின் வீர தீர செயலை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்டார்டிகா துருவ பனிப் பிரதேசத்திற்கு செல்ல எல்லா உதவிகளையும் செய்த எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்துக்கு மானஷா நன்றி தெரிவித்துள்ளார்