கல்வி

மே.வங்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு - வழக்கமான கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

மே.வங்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு - வழக்கமான கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

EllusamyKarthik

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகின்ற காரணத்தால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் ஆப்-லைனில் மாணவர்களுக்கு வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிக் கட்டணம் தொடர்பாக முக்கிய அனுமதியை கொல்கத்தா உயர்நீதிமன்றம் பள்ளிகளுக்கு அளித்துள்ளது. 

கொரோனா தொற்று பரவல் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருகின்ற காரணத்தால் கல்விக் கூடங்கள் தங்களது கொள்கையின் படி கல்விக் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளதாக PTI தெரிவித்துள்ளது. 

முன்னதாக கட்டண வசூலில் 20 சதவிகிதம் வரை பள்ளிகள் குறைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு மாணவர்களின் பெற்றோர்கள் மேற்கொண்ட வேண்டுகோளின் அடிப்படையில் குறைக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியை நீதிபதிகள் முகர்ஜி மற்றும் Moushumi பட்டாச்சார்யா அமர்வு வழங்கியுள்ளது.