கல்வி

பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டங்கள் குறைகிறதா?

பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டங்கள் குறைகிறதா?

Rasus

கல்வியாண்டு குறைவதால், பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது குறித்த அறிக்கையை வல்லுநர் குழு விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுமுடக்கத்தால் 2019-20-ஆம் கல்வியாண்டில் 1 மாதம் பள்ளிகள் இயங்கவில்லை. 2020-21-ஆம் கல்வியாண்டிலும் பள்ளிகளை எப்போது திறக்க முடியும் என்பதை முடிவு செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளை திறக்கலாம் என தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொற்று எண்ணிக்கை உச்சம் பெறும் என ஆய்வுக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைக்கலாமா என்பதை பள்ளிக் கல்வி வல்லுநர் குழு ஆலோசித்து வருகிறது. கல்வியாண்டு முடங்கியுள்ள நிலையில், தொழில்நுட்ப வசதிகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் இக்குழு பரிந்துரைகளை வழங்க உள்ளது. பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையிலான இக்குழுவில் பள்ளிக் கல்வி இயக்குநர்கள், யுனிசெஃப் பிரதிநிதி, உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளனர்