கல்வி

சமூகநீதி திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் - மத்திய அரசு சொல்வதென்ன?

சமூகநீதி திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் - மத்திய அரசு சொல்வதென்ன?

Sinekadhara

பட்டியல் பிரிவு மற்றும் இதர மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக தேசிய அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்தி வருகிறது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர் சந்த் கெலாட் கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.

பட்டியல் பிரிவு, நாடோடி பழங்குடியினர், நிலமில்லா விவசாய தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கலைஞர்கள் ஆகிய பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வெளிநாட்டில் பயில்வதற்கான நிதிஉதவி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

2015-16-ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் வெளிநாட்டில் கற்பதற்கு நிதியுதவி பெறுவதற்காக 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 19 பேர் அயல்நாடுகளுக்கு சென்ற நிலையில், 2019-20-ஆம் ஆண்டில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 63 பேர் வெளிநாடுகளுக்கு சென்றனர்.