கல்வி

கல்வி உதவித்தொகை திட்டங்கள்: தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரம்

EllusamyKarthik

நான்கு வெவ்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் ரூ 15,785.36 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

"2014-15 முதல் 2021-22 வரை வெவ்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட மாநில வாரியான நிதி விவரங்கள் இணைப்பில் உள்ளன.

கல்வி உதவித்தொகைகளின் எண்ணிக்கை மற்றும் தொகையை உயர்த்துவது உட்பட அனைத்து அம்சங்களையும் திட்ட மறுசீரமைப்பு செயல்முறையின் போது அமைச்சகம் கவனத்தில் கொள்கிறது.

சிறுபான்மை சமூகங்களின் கல்வி மேம்பாட்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14-ல் ரூ 1888.50 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2022-23-ல் பட்ஜெட் மதிப்பீடு ரூ 2515.00 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலம்/யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறுபான்மையினரின் மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கிடையே உதவித்தொகை விநியோகம் செய்யப்படுகிறது.

நான்கு வெவ்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் ரூ 15,785.36 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ 909.48 கோடியும், புதுச்சேரிக்கு ரூ 8.33 கோடியும் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

Source: PIB