தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வுகளை எழுதிய மாணவர்கள், தாங்கள் பெற்ற மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் அவர்கள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
தற்போது பிளஸ் ஒன் மாணவர்கள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு இன்று முதல் (ஆகஸ்ட் 31 ) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுபற்றிய அறிவிப்பில், பிளஸ் ஒன் பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களில் விண்ணப்பித்தவா்களுக்கு மட்டும் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விடைத்தாள் நகல் இணையவழியில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து விடைத்தாள் நகலை சரிபாா்த்த பின் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவா்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகங்களில் செப்டம்பர் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணம் மறுமதிப்பீட்டுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.