கல்வி

வேளாண் பட்டயப்படிப்புகளுக்கான தரவரிசை: அக்டோபர் 29 ஆம் தேதி வெளியீடு

வேளாண் பட்டயப்படிப்புகளுக்கான தரவரிசை: அக்டோபர் 29 ஆம் தேதி வெளியீடு

webteam

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்வி நிலையங்களில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளில் சேர 3,644 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் தமிழகத்தில் மூன்று உறுப்புக் கல்வி நிலையங்கள் மற்றும் இணைப்பு கல்வி நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன.

இங்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த கல்வியாண்டு 860 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கியது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அக்டோபர் 16 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரையில் ஆன்லைன் வழியாக 3,644 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அஞ்சல் வழியாக அக்டோபர் 22 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பட்டயப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.