பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. வரும் 20ஆம் தேதி முதல் இதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. காலை 10.30 மணி அளவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார்.
மாணவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள 4 நாள்கள் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து 20ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 25ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.