கல்வி

இன்று வெளியாகிறது அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்கைகளுக்கான தரவரிசைப் பட்டியல்!

இன்று வெளியாகிறது அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்கைகளுக்கான தரவரிசைப் பட்டியல்!

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 27ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 7 ஆயிரமாக உள்ளது. அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அந்தந்த கல்லூரிகள் வெளியிடும். பி.ஏ தமிழ் இலக்கியம், பி.லிட் போன்ற படிப்புகளுக்கான தமிழ் தரவரிசைப் பட்டியல், 12ம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும்.