கல்வி

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவிலும் அரசு மருத்துவர்கள் கலந்துகொள்ள அனுமதி

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவிலும் அரசு மருத்துவர்கள் கலந்துகொள்ள அனுமதி

Veeramani

முதுநிலை மருத்துவபடிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்குக்கான 50% ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள், 30% வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

50 % ஒதுக்கீடு ஏற்கனவே பெற்றுள்ள அரசு மருத்துவர்கள், பொது பிரிவிலும் கலந்து கொள்ள அனுமதித்ததை எதிர்த்தும், வெயிட்டேஜ். வழங்குவதை எதிர்த்தும் மருத்துவர் பார்க்கவியான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசு மருத்துவர்களுக்கு 50% விட கூடுதலாக வழங்குவதால் தனியார் மருத்துமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்களில், மலைப்பகுதி அணுக முடியாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிவதால் பொதுமக்கள் தான் பயன்பெறுகின்றனர் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.