கல்வி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் முதலிடம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் முதலிடம்

Rasus

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை தட்டிச் சென்றது.

2017-2018-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 91.1 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.1 சதவீத மாணவிகளும், 87.7 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இதனிடையே பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது. 96.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 96.1 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. இதனிடையே தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25ம் தேதி மறுத்தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.