பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இதில் மொத்தமாக 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவிகள் 96.5 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமாக 2,634 பள்ளிகள் மொத்தமாக 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. +1 பொதுத்தேர்வு தேர்ச்சியில் ஈரோடு மாவட்டம் 98.09 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 97.90 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97.60 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாடம் இடத்தையும் பிடித்துள்ளன.
மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge1.nic.in , www.dge2.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையங்கள், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் பள்ளிகளில் வழங்கிய கைபேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும், தேர்வு முடிவுகள் SMS மூலம் அனுப்பப்படும்.