கல்வி

பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து க்விஸ், மீம்ஸ் போட்டி - இணையவழியில் பங்கேற்க அழைப்பு

பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து க்விஸ், மீம்ஸ் போட்டி - இணையவழியில் பங்கேற்க அழைப்பு

webteam

தேசிய ஊட்டச்சத்து நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த வினாடி வினா, மீம்ஸ் போட்டிகளுக்கான அறிவிப்பை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தேசிய ஊட்டச் சத்து இயக்கம், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி செப்டம்பர் மாதம் முழுவதும் மாபெரும் மக்கள் இயக்கமாகக் கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய பள்ளிக்கல்வி அமைச்சகம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடையே உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த இரண்டு போட்டிகளை இணையவழியில் நடத்துகிறது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த வினாடி வினா போட்டி செப்டம்பர் 1 ம் தேதி முதல் 30ம் தேதி வரையும், உணவு மற்றும் ஊட்டச் சத்து சார்ந்த மீம்ஸ் உருவாக்கும் போட்டி செப்டம்பர் 5 ம் தேதி முதல் 20 ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

இ-க்விஸ் போட்டியில் கலந்துகொண்டு சரியான விடையளிக்கும் மாணவர்கள் என்சிஇஆர்டி ஆன்லைன் சான்றிதழ்களை வழங்கும். மாநில எஸ்இஆர்டியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் சிறந்த 5 மீம்ஸ்களில் தேசிய அளவில் வெற்றிபெறும் மீம்ஸ்களுக்கு தேசிய அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தப் போட்டிகள் குறித்த தகவல்களை அனைத்துவகை பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்க உதவும் இணையதள முகவரி: mygov.in/campaigns