ரயில்வே துறையில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை 22.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தற்போது தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் (Non Technical Popular Categories) 35,277 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய விரிவான தகவல்கள் கொண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள் :
1. ஜூனியர் கிளர்க் கம் டைபிஸ்ட் - 4319
2. அக்கவுண்ட்ஸ் கிளர்க் கம் டைபிஸ்ட் - 760
3. ஜுனியர் டைம் கீப்பர் - 17
4. ட்ரைன்ஸ் கிளர்க் - 592
5. கமர்சியல் கம் டிக்கெட் கிளர்க் - 4940
6. ட்ராப்பிக் அசிஸ்டெண்ட் - 88
7. குட்ஸ் கார்டு - 5748
8. சீனியர் கமர்சியல் கம் டிக்கெட் கிளர்க் - 5638
9. சீனியர் கிளர்க் கம் டைபிஸ்ட் - 2873
10. ஜுனியர் அக்கவுண்ட் அசிஸ்டெண்ட் கம் டைபிஸ்ட் - 3164
11. சீனியர் டைம் கீப்பர் - 14
12. கமர்சியல் அப்ரெண்டீஸ் - 259
13. ஸ்டேஷன் மாஸ்டர் - 6865
மொத்தம் = 35,277 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள் : 01.03.2019, மாலை 04.00 மணி
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2019, இரவு 11.59 மணி
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள் : 05.04.2019, இரவு 11.59 மணி
எஸ்.பி.ஐ செல்லான் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள் : 05.04.2019, மதியம் 03.00 மணி
ஆன்லைனில் விண்ணப்பத்தை முழுமையாக சமர்பிக்க கடைசி நாள் : 12.04.2019, இரவு 11.59 மணி
ஜூன் - செப்டம்பர் 2019க்குள் முதற்கட்ட கணினி வழித்தேர்வு நடைபெறலாம்.
வயது வரம்பு (01.07.2019க்குள்) :-
முதல் 5 பணிகளுக்கான வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயது வரை இருத்தல் வேண்டும்.
அடுத்து வரும் 8 பணிகளுக்கான வயது வரம்பு : 18 வயது முதல் 33 வயது வரை இருத்தல் அவசியம்.
சம்பளம் :
குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் 35,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படலாம்.
தேர்வுக்கான கட்டண விவரம் :
1. பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் - 500 ரூபாய்
2. மற்ற விண்ணப்பதாரர்கள் (எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உட்பட) - 250 ரூபாய்
குறிப்பு : முதற்கட்ட கணினி வழித்தேர்வுக்குப் பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.400 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர் செலுத்தியதிலிருந்து ரூ.250 ரூபாயும் விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை :
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இரண்டிலுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.
ஆன்லைனில் இன்டர்நெட் பேங்கிங் அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.
ஆப்லைனில் எஸ்.பி.ஐ சல்லான் மூலமாகவோ அல்லது தபால் நிலையத்தில் சல்லான் மூலமாகவோ தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.
கல்வித்தகுதி :-
முதல் ஐந்து பணிகளுக்கான கல்வித்தகுதி :
குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பையோ அல்லது அதற்கிணையான படிப்பையோ பயின்றிருத்தல் அவசியம்.
அடுத்த எட்டு பணிகளுக்கான கல்வித்தகுதி :
குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பையோ அல்லது அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தமிழகத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள், www.rrbchennai.gov.in - என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறைகள் :
இரண்டு முக்கிய தேர்வு முறைகள் மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
1. கணினி வழித்தேர்வு
2. டைப்பிங் திறமை தேர்வு
முக்கிய குறிப்புகள் :
1. தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
2. குறிப்பிட்ட மருத்துவ தகுதிகள் அவசியம்
3. தேர்வு எழுத செல்லும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு மட்டும் ரயிலில் செல்வதற்கான அதாவது ஸ்லீப்பர் ரயில் பயணத்தை இலவசமாக மேற்கொள்ளலாம்..
மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற
http://www.rrbcdg.gov.in/uploads/cen_01_2019_eng.pdf - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.