கடந்த மார்ச் மாதம் மத்திய பல்கலைகழகங்களில் சேர அரசு பொது நுழைவுத்தேர்வு மூலம் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் மாநில மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்களும் பொதுதேர்வை நடத்த முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக பல மாணவர்கள் உயர்கல்வி பட்டப்படிப்பில் சேர தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் சேர விண்ணப்பித்து பலர் கல்லூரிகளின் சேர்க்கை கட்டணம் மற்றும் பிற கட்டணங்களையும் செலுத்தியுள்ளனர்.
தற்போது கல்லூரியில் செர்ந்த சேர்க்கையை ரத்து செய்தால் அதற்கு தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் சேர்க்கைக்கு செலுத்திய கட்டணங்கள் திரும்ப தரப்படவில்லை எனவும் தகவல் வெளிவந்த நிலையில், அரசுசாராத பிற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் தங்களது சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும் முழுவதுமாக திருப்பியளிக்க வேண்டும் எனவும், சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் பல்கலைகழக மானியக் குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியக் குழு யுஜிசி ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.