கல்வி

“வரும் ஆண்டில் புதிய வேலைகளுக்கு வாய்ப்பில்லை” - நிபுணர்கள் கணிப்பு

“வரும் ஆண்டில் புதிய வேலைகளுக்கு வாய்ப்பில்லை” - நிபுணர்கள் கணிப்பு

webteam

தற்போது நிலவிவரும் பொருளாதார மந்த நிலையால், அடுத்த ‌ஆண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பில்லை என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு‌ வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தொழில் நிறுவனங்கள் இழப்புக்கு உள்ளாகியதால், ஆட்குறைப்பு ந‌வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபொருளாதார மந்த நிலை தொடர்ந்தால், அடுத்த ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக சாத்தியமில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு பெரிதும் இருக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். புதிதாக ஆட்களை எடுப்பதற்கு பதிலாக, இருக்கும் ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. 2020ல் முதலீடுகளும், நுகர்வும் அதிகரித்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றனர்.