கல்வி

புதிய கல்விக் கொள்கை: நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு

புதிய கல்விக் கொள்கை: நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு

webteam

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நாளை முதல் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கை அறிக்கையை வெளியிட்டது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அதற்காக http://Innovateindia.mygov.in/nep2020 என்ற இணையபக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையப்பக்கத்தில் சென்று ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.