கல்வி

கல்வித் தொலைக்காட்சியில் நீட் பயிற்சி : நாளை முதல் தொடக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் நீட் பயிற்சி : நாளை முதல் தொடக்கம்

webteam

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல் நீட் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதால், மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியிருக்கும். குறிப்பாக நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. பல மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்றாலும், ஏழை மாணவர்களால் இதைப் பெற முடியாத நிலை உள்ளது.

இதனால் தமிழக அரசுக் கல்வித் தொலைக்காட்சியில் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்லுநர்களைக் கொண்டு எடுக்கப்படும் இந்தப் பயிற்சி, தினமும் 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.