கல்வி

அதிகரிக்கும் தேர்வர்கள் எண்ணிக்கை.. சரியும் தேர்ச்சி விகிதம்.. தமிழகத்தின் நீட் முடிவுகள்!

அதிகரிக்கும் தேர்வர்கள் எண்ணிக்கை.. சரியும் தேர்ச்சி விகிதம்.. தமிழகத்தின் நீட் முடிவுகள்!

webteam

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளை விட குறைந்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதித் தேர்வில் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 57.44 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதற்கு அடுத்த ஆண்டில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில் 58,922 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 54.40 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர். 

நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது. அதாவது தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 34 ஆயிரம் மாணவ, மாணவிகளில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 51.30 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய வருடங்களுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ள போதிலும், தேர்வு எழுதியோர் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கணக்கிடப்படும் தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் பின்னடைவையே சந்தித்துள்ளது. இதனால், தேர்ச்சி விகிதத்தில் அகில இந்திய வரிசையில் 23-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 28-வது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/8DPYN4IxSow" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>