கல்வி

எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு ரத்து?

எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு ரத்து?

Rasus

எம்டி மற்றும் எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைமுறையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருத்தப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் இந்த அம்சம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களுக்கு NATIONAL EXIT TEST அதாவது தேசிய நிறைவு நிலைத் தேர்வு என்ற பெயரில் புதிதாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தனியாக நீட் தேர்வு தேவையில்லை என அரசு கருதுகிறது.

மேலும் எம்பிபிஸ் படிப்பு முடித்த பிறகு மருத்துவ பணியை தொடங்குவதற்கான உரிமம் பெறுவதற்கும் தனித் தேர்வு எழுத தேவையில்லை என்றும் NATIONAL EXIT TEST முடிவுகளே போதுமானது என்றும் மசோதாவில் ஒரு அம்சம் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. திருத்தப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதா விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 80,000 எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 1.5 லட்சம் எம்பிபிஎஸ் மாணவர்கள் விண்ணப்பிப்பது குறிப்பிடத்தக்கது.