கல்வி

நீட் தேர்வு மையத்தினுள் தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன ?

நீட் தேர்வு மையத்தினுள் தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன ?

webteam

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், தேர்வு மையத்தில் என்னென்ன பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வு மையத்தினுள் நுழையும் மாணவர்களுக்கு  செல்போன், ப்ளூடூத், பெண் டிரைவ், டெக் பேனா, ஏர் போன், கால்குலேட்டர், கேமரா உள்ளிட்ட எலக்ரானிக் சாதனங்களை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கைக்கடிகாரம் , பர்ஸ், வாலட், பெல்ட், ஜர்க்கின், நகைகள், தண்ணீர் பாட்டில்கள், உணவு பொருட்கள், கூலர்ஸ், துண்டு காகிதங்கள் உள்ளிட்டவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.