மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுகம் செய்யப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையில் என்னென்ன மொழிகளை சேர்பது என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் அவரவர் விரும்புகின்ற மொழியை தேர்வு செய்து படிக்கலாம். அதில் எந்தவித மொழி திணிப்பும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி துவங்கி உயர்கல்வி வரை அனைத்திலும் சமஸ்கிருத மொழி ஒரு விருப்ப மொழியாக இருக்கும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிராந்தியங்களை சார்ந்த பழமை வாய்ந்த மொழிகளுக்கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே ‘பல கோடி பேரின் வாழ்வில் புதிய கல்விக்கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தும்’ என தெரித்துள்ளார் பிரதமர் மோடி.