கல்வி

'மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் டிசியில் ரிமார்க்' - அமைச்சரின் கருத்தை எப்படி பார்ப்பது?

'மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் டிசியில் ரிமார்க்' - அமைச்சரின் கருத்தை எப்படி பார்ப்பது?

Sinekadhara

பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மாற்றுச் சான்றிதழில் அதுபற்றி குறிப்பிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டு பின்பு பாடங்கள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இன்றைய காலத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது என்றும் மன அழுத்தத்தில் இருந்து குழந்தைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை கூறுவது தவறு எனக்கூறிய அமைச்சர், பள்ளிகள், பெற்றோர் மற்றும் அரசு என முத்தரப்புக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளதாக கூறினார். ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ மாணவர்கள் தொந்தரவு கொடுத்தால் மாற்றுச் சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிப்பிடப்படும். அதோடு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றும் அன்பில் மகேஷ் எச்சரித்தார். கைபேசிகளை பள்ளிகளுக்கு கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.