கல்வி

நீட் தாக்கம் - ஆய்வுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

நீட் தாக்கம் - ஆய்வுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

Sinekadhara

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவில் 8 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அந்தக் குழுவில் உறுப்பினர்களாக டாக்டர்கள் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்த அரசு, தமிழகத்தில் தனியார் , அரசு பள்ளிகளில் நீட் தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்? அதில் எத்தனை பேர் வெற்றிபெற்றனர்? என்பது போன்ற 5 ஆண்டு புள்ளிவிவரங்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க இந்த குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. விரிவான அறிக்கை பெறப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து வெளியிடப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். மேலும், மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த விஷயத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.