கல்வி

வழக்கறிஞர் ஆக விருப்பமா?

வழக்கறிஞர் ஆக விருப்பமா?

webteam

தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சட்டக் கல்லூரிகளில், 2019-2020 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டம் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்புகள்:
B.A.L.L.B - 5 வருட படிப்பு
L.L.B - 3 வருட படிப்பு

காலியிடங்கள்:
B.A.L.L.B - 5 வருட படிப்பு = 1,411 இடங்கள்
L.L.B - 3 வருட படிப்பு = 1,541 இடங்கள்

முக்கிய தேதிகள்:
B.A.L.L.B - 5 வருட படிப்புக்கு விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 16.05.2019
B.A.L.L.B - 5 வருட படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2019
L.L.B - 3 வருட படிப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 28.06.2019
L.L.B - 3 வருட படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2019

பதிவுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் = ரூ.500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் = ரூ.250

கல்வித்தகுதி:
1. B.A.L.L.B என்ற பட்டப்படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பில் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருத்தல் வேண்டும். 
2. L.L.B - 3 வருட படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு டிகிரியில் பயின்று 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.tndalu.ac.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபாலிலோ கீழ்க்கண்ட முகவரிக்கு சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
‘The Chairman, Law Admissions, 2019-2020’, The Tamil Nadu Dr.Ambedkar Law University, "Poompozhil", No.5, Dr. D.G.S. Dhinakaran Salai, 
Chennai-600 028

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, http://tndalu.ac.in/pdf/2019/adm/AffAdmNot19-20.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.