கல்வி

ஐஐடி, என்ஐடிகளில் சேர ஜேஇஇ நுழைவுத்தேர்வு- பாதுகாப்பு விதிகளுடன் நாளை தொடக்கம்

ஐஐடி, என்ஐடிகளில் சேர ஜேஇஇ நுழைவுத்தேர்வு- பாதுகாப்பு விதிகளுடன் நாளை தொடக்கம்

webteam

இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு ஜேஇஇ நுழைத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக தேர்வு தேதி தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் தேதி அறிவிக்கப்பட்டு நாளை (செப்டம்பர் 1ம் தேதியன்று) தொடங்குகிறது.

ஜேஇஇ தேர்வு முதல்நிலை மற்றும் பிரதானத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 1 ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுவாக முதல் நிலை தேர்வானது தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். 

தற்போது முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் 9 லட்சத்து 53,473மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 பேர் எழுதுகின்றனர். தேர்வுமையங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்பட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்றவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு பற்றிய சந்தேகங்களை 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.