கல்வி

இஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்!

இஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்!

webteam

திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகத்தில் பொறியியல், டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சிக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளோர் இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணிகள்:  
1. பட்டதாரி பயிற்சி பணிகள் - Graduate Apprentice
2. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - Technician Apprentice
3. ட்ரேடு அப்ரண்டிஸ் - Trade Apprentice

காலியிடங்கள்:
1. பட்டதாரி பயிற்சி பணிகள் - 41
2. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - 59
3. ட்ரேடு அப்ரண்டிஸ் - 120

மொத்தம் = 220 காலிப்பணியிடங்கள்
 
முக்கிய தேதிகள்:  
அறிவிப்பாணை வெளியான தேதி: 07.12.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:
1. பட்டதாரி பயிற்சி பணிகள் - 14.12.2019, காலை 09.00 மணி & மதியம் 01.30 மணி
2. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - 21.12.2019, காலை 09.00 மணி & மதியம் 01.30 மணி
3. ட்ரேடு அப்ரண்டிஸ் - 04.01.2020, காலை 09.00 மணி & மதியம் 01.30 மணி

ஊக்கத்தொகை: 
1. பட்டதாரி பயிற்சி பணிகள் - ரூ.9,000 / மாதம்
2. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - ரூ.8,000 / மாதம்
3. ட்ரேடு அப்ரண்டிஸ் - ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை / மாதம்

கல்வித்தகுதி:
1. பட்டதாரி பயிற்சி பணிகள் - பி.இ / பி.டெக் அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
3. ட்ரேடு அப்ரண்டிஸ் - 10ஆம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் துறை சார்ந்த ஐடிஐ சான்றிதழ் படிப்பை முடித்திருத்தல் அவசியம்

குறிப்பு:
பட்டதாரி பயிற்சி பணிகள், டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் 2017, 2018, 2019 ஆம் ஆண்டில் டிப்ளமா, இன்ஜினியரிங் முடித்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: 
ஆன்லைனில், https://www.iprc.gov.in/  - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, நேர்முகத்தேர்வின் போது பூர்த்தி செய்த விண்ணப்பதுடன் கூடிய கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம்,

மகேந்திரகிரி,

திருநெல்வேலி மாவட்டம் - 627 133.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, https://www.iprc.gov.in/iprc/index.php/en/careers - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.