isro PT
கல்வி

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி! இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தை அறிவித்தது இஸ்ரோ! - முழுவிபரம்

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக ( மே மாதம் 13ம் தேதியிலிருந்து 24ம் தேதிவரை) இளம் விஞ்ஞானி(யுவிகா) திட்டத்தை அறிவித்துள்ளது.

Jayashree A

சமீப காலங்களில் விண்வெளியை பற்றிய புரிதல் மாணவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. சந்திராயன் 3, ஆதித்யா L1 போன்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சின் போது, மாணவர்கள் இதை பற்றி நன்கு தெரிந்துக்கொள்ளும் விதமாக, இஸ்ரோ, பள்ளியில் படிக்கும் மாணவர்களை விண்வெளி மைதானத்திற்கு வரவழைத்து அதன் செயல்பாடுகளை விளக்கினார்கள். பள்ளிகளிலும் விண்வெளித்துறை பற்றிய ஆர்வத்தை ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஊட்டி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க....

ISRO விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக வருகின்ற ( மே மாதம் 13ம் தேதியிலிருந்து 24ம் தேதிவரை) இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தை அறிவித்துள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெறும் இத்திட்டமானது, மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 20 தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரை செயப்பட இருக்கும் ISRO அந்தரிக்ஷா ஜிக்யாசா தளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்துக்கொள்ளலாம்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

  • 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், தங்களின் 8 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அட்டவணையை இணைக்க வேண்டும். (50 % மதிப்பெண்).

  • அறிவியல் சார்ந்த ஆன்லைன் வினாடி வினாவில் செயல்திறன் பெற்றிருந்தால் (10 பாயிண்டுகள்)

  • அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பு (கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி / மாவட்டம் / மாநிலம் மற்றும் அதற்கு மேல்) இருந்தால் (10 %)

  • ஒலிம்பியாட் அல்லது அதற்கு இணையான ரேங்க் (கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி / மாவட்டம் / மாநிலம் மற்றும் அதற்கு மேல் நிலை) 1 முதல் 3 ரேங்க் (5%)

  • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் (கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி/மாவட்டம்/மாநிலத்தில் 1 முதல் 3 ரேங்க் மற்றும் அதற்கு மேல் நிலை பெற்றிருந்தால் (5%)

  • கடந்த 3 ஆண்டுகளில் சாரணர் மற்றும் வழிகாட்டிகள் / NCC / NSS உறுப்பினராக இருந்திருந்தால் (5%)

  • பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள கிராமம் / கிராமப்புற பள்ளியில் படிப்பத மாணவராக இருந்தால் (15%)

  • பாயிண்டுகள் அதிகம் பெற்ற மாணவர்களை இஸ்ரோ தேர்வு செய்யும்.

ISRO அந்தரிக்ஷா ஜிக்யாசா தளத்தில் பதிவு செய்வது எப்படி?

இத்தளம் பிப்ரவரி 20 தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரை செயப்படும். இத்தேதிகளில் மாணவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை குறிப்பிட்ட தளத்தில் பதிந்துக்கொள்ளவேண்டும்.

அந்தரிக்ஷா ஜிக்யாசா தளத்தில் (க்ளிக் செய்யவும்) பதிவு செய்யப்பட்டவுடன் மாணவர்களின் மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்பட்ட சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவேண்டும்.

பிறகு தளத்தில் கேட்கப்படும் SpaceQuiz-ல் பங்கேற்க வேண்டும்.

பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவேற்ற வேண்டும்.

பிறகு, சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணையதளத்தில் சரிபார்ப்பதற்காக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆவணத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்.

விண்வெளியில் சாதிக்கநினைக்கும் மாணவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு...

இஸ்ரோவின் கூற்றுப்படி, இந்த திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த ஆராய்ச்சி/தொழிலைத் தொடர அதிக மாணவர்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.