கல்வி

ஐஐடி சென்னை: வணிக கணக்கியல் ஆன்லைன் படிப்பு அறிமுகம்

ஐஐடி சென்னை: வணிக கணக்கியல் ஆன்லைன் படிப்பு அறிமுகம்

webteam

சென்னையில் உள்ள ஐஐடி கல்விநிலையத்தில் வணிக கணக்கியல் செயல்பாடு பற்றிய ஆன்லைன் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிப்பை பெங்களூருவைச் சேர்ந்த அர்த்தவித்யா நிறுவனத்துடன் இணைந்து ஐஐடியின் டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமி வழங்குகிறது.

நிதி மற்றும் கணக்கியல் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களை நிபுணத்துவம் மிக்கவர்களாக மாற்றுவதை வணிக கணக்கியல் செயல்பாடு பற்றிய ஆன்லைன் படிப்பு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கு உதவியாக உள்ள இந்தப் படிப்பு முழுவதும் ஆன்லைன் வழியாக நடத்தப்படும். வெர்ச்சுவல் ஆபீஸ், செயற்கை நுண்ணறிவு, இன்ட்ராக்டிவ் லேர்னிங் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் போன்ற பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படும். ஆன்லைன் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.skillsacademy.iitm.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமியின் தலைவர் கே. மங்கள சுந்தர், "இந்தப் படிப்பு மாணவர்களுக்கு மெய்நிகர் அலுவலகச் சூழலை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதார்த்த நிலையில் பார்க்கும் அலுவலகப் பணிச்சூழலை மாணவர்கள் பெறுவார்கள். மெய்நிகர் கார்ப்பரேட் சூழலில் நிகழ்கால நிதிப் பரிவர்த்தனைகளை செயற்கை நுண்ணறிவுத்தளம் வழங்குகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பணி அனுபவங்களை ஆன்லைன் படிப்பின் மூலம் மூன்று மாதங்களில் பெறமுடியும். அது வேலைவாய்ப்பிற்கு உதவியாக இருக்கும்" என்கிறார்.