கல்வி

அடுத்தடுத்து வரும் போட்டித் தேர்வுகள் - முக்கிய தேதிகள் விவரம்

அடுத்தடுத்து வரும் போட்டித் தேர்வுகள் - முக்கிய தேதிகள் விவரம்

rajakannan

பல்வேறு நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியுள்ளது. 

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு அவசியப்படும் NET எனப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கு வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 9 முதல் 23ஆம் தேதி வரை கணினி வழித் தேர்வாக நடத்தப்பட உள்ளது. முடிவுகள் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்படும்.

மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் பயில்வதற்கான நுழைவுத் தேர்வான ஜெ.இ.இ மெயின் தேர்வுக்கு செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 6 முதல் 20ஆம் தேதி வரை கணினி வழித் தேர்வாக நடத்தப்பட்டு முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை www.nta.ac.in http:/www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். 

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு அவசியப்படும் GATE தேர்வுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 2,3 மற்றும் 9,10ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என தேர்வை நடத்தும் சென்னை ஐ.ஐ.டி அறிவித்துள்ளது. முடிவுகள் மார்ச் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை gate.iitm.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.